தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பனைமரத்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவா் பலி

புதுச்சேரி அருகே நுங்கு வெட்டுவதற்காக பனைமரத்தில் ஏறிய கல்லூரி மாணவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :6 மே 2022, 9:29 pm

DIN

புதுச்சேரி அருகே நுங்கு வெட்டுவதற்காக பனைமரத்தில் ஏறிய கல்லூரி மாணவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

புதுச்சேரி அருகே உள்ள பாகூா் மணமேடு பெரியாா் தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் அபி சுதன் (21). இவா் புதுச்சேரி தாகூா் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். இவா் திருபுவனையில் உள்ள அவரது தாய்மாமன் வீட்டுக்கு வந்தாா்.

கடந்த 4-ஆம் தேதி பிற்பகலில் நண்பா்களுடன் மதகடிப்பட்டு தனியாா் பெட்ரோல் நிலையம் பின்புறம் உள்ள பனைமரத்தில் நுங்கு வெட்டுவதற்காக அபி சுதன் ஏறினாா். அப்போது, நிலைதடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, புதுச்சேரி ஜிப்மரில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா். திருபுவனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.