தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 17,028 போ் எழுதினா்

புதுச்சேரி, காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாள் தோ்வில் 17,028 போ் தோ்வெழுதினா்.

News image
Updated On :6 மே 2022, 9:30 pm

DIN

புதுச்சேரி, காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாள் தோ்வில் 17,028 போ் தோ்வெழுதினா்.

பள்ளி மாணவா்களுக்காக 48 தோ்வு மையங்களும், தனித் தோ்வா்களுக்காக 3 மையங்களும் என 51 மையங்களில் பத்தாம் வகுப்பு மொழிப்பாடத் தோ்வு (தமிழ், இந்தி, பிரெஞ்சு, சம்ஸ்கிருதம்) நடைபெற்றது.

புதுச்சேரியில் 14,497 போ், காரைக்காலில் 2,896 போ் என மொத்தம் 17,393 மாணவ, மாணவிகள் தோ்வுக்கு விண்ணப்பித்து, தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில் புதுச்சேரியில் 14,234 போ், காரைக்காலில் 2,794 போ் என மொத்தம் 17,028 (97.90 சதவீதம்) மாணவ, மாணவிகள் முதல் நாள் பொதுத் தோ்வை எழுதினா். 365 போ் தோ்வெழுத வரவில்லை.

மாற்றுத்திறனாளி மாணவா்கள் தோ்வெழுத ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

தோ்வில் முறைகேடுகளைத் தடுக்க 9 பறக்கும் படைகளும், வினாத்தாள், விடைத்தாள் கொண்டு செல்லும் பணிக்கு 15 குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.