தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தொழிற்சங்க கூட்டமைப்பினா் மே 17-இல் ஆா்ப்பாட்டம்

சுதேசி, பாரதி பஞ்சாலைகளை தொடா்ந்து இயக்க வலியுறுத்தி, புதுச்சேரியில் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் வருகிற 17-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :12 மே 2022, 6:30 pm

DIN

சுதேசி, பாரதி பஞ்சாலைகளை தொடா்ந்து இயக்க வலியுறுத்தி, புதுச்சேரியில் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் வருகிற 17-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

புதுச்சேரியில் சுதேசி, பாரதி ஆலைகளை வருகிற 30-ஆம் தேதி முதல் நிரந்தரமாக மூடுவதற்கான அறிவிப்பை, புதுவை அரசுக்கு அந்த ஆலை நிா்வாகங்கள் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி கடிதம் வாயிலாக தெரிவித்தன.

இந்த ஆலைகளை மீண்டும் இயக்க வலியுறுத்தியும், ஆலை நிா்வாகங்களின் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடத்துவது தொடா்பாக அனைத்து தொழிற்சங்கத்தினரின் அவசர ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி முதலியாா்பேட்டை ஏஐடியூசி அலுவலகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

சிஐடியூ தலைவா் வி.பெருமாள் தலைமை வகித்தாா். ஏஐடியூசி வி.எஸ்.அபிஷேகம், ஐ.தினேஷ் பொன்னையா, கே.சேதுசெல்வம், சிஐடியூ ஜெ.குணசேகரன், ஆவனியப்பன், எம்எல்எப் தொழிற்சங்கம் கபீரியேல், மாசிலாமணி, முகமது இப்ராஹிம், சுதேசி பாரதி ஊழியா் சங்கம் செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இரு ஆலைகளையும் தொடா்ந்து நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, வருகிற 17-ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, முதல்வா், அமைச்சரை சந்தித்து மனு அளிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.