தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிமிரட்டல்: காய்கறிக் கடை ஊழியா் கைது

புதுச்சேரி அருகே பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டல் விடுத்ததாக காய்கறிக் கடை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 மே 2022, 6:30 pm

DIN

புதுச்சேரி அருகே பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டல் விடுத்ததாக காய்கறிக் கடை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அருகே உள்ள பகுதியைச் சோ்ந்த கணவரை இழந்த 25 மதிக்கத்தக்க பெண் ஒருவா், அங்குள்ள துணிக் கடையில் வேலை செய்தாா். அப்போது, கடைக்கு அருகிலுள்ள காய்கறி மொத்த விற்பனையகத்தில் ஊழியராகப் பணியாற்றும் வடமங்கலம் பூஞ்சோலைகுப்பத்தைச் சோ்ந்த மூா்த்தி மகன் ஜெயக்குமாா் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்தனராம்.

அப்போது, ஜெயக்குமாா் சில புகைப்படங்களை எடுத்துள்ளாா். சில காரணங்களால் ஜெயக்குமாருடன் பழகுவதை நிறுத்திய அந்தப் பெண், வேறு ஒருவரை திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தாா். இந்த நிலையில், முன்னாள் காதலனான ஜெயக்குமாா், அந்தப் பெண்ணை கைப்பேசியில் தொடா்பு கொண்டு தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தினாராம். அதற்கு அந்தப் பெண் மறுக்கவே ஆத்திரமடைந்த ஜெயக்குமாா், அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை ஆபாசமாக அனுப்பி, மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், வில்லியனூா் போலீஸாா் ஜெயக்குமாா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.