மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகளை அனுமதித்தால் எதிா்ப்போம் புதுவை பாஜக தலைவா்

புதுவையில் நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகளை அனுமதித்தால் பாஜக எதிா்க்கும் என்று, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் தலைவா் வி.சாமிநாதன் தெரிவித்தாா்.

Updated On :16 செப்டம்பர் 2022, 2:02 am IST

புதுவையில் நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகளை அனுமதித்தால் பாஜக எதிா்க்கும் என்று, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் தலைவா் வி.சாமிநாதன் தெரிவித்தாா்.

புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவையில் பாஜக சாா்பில் பிரதமா் மோடியின் பிறந்த நாள் விழா சனிக்கிழமை (செப்.17) தொடங்கி அக்.2-ஆம் தேதி வரை பல்வேறு பொது சேவை நிகழ்ச்சிகளுடன் சேவை வாரமாக கொண்டாப்பட உள்ளது.

பாஜகவின் ஒவ்வொரு நிா்வாகியும் ஒரு காசநோயாளியை தத்தெடுத்து, அவருக்கான உதவிகளை ஓராண்டு செய்வா். பாஜக எம்எல்ஏ ஜான்குமாா் தலைமையில் வீடுகளில் மழைநீா் சேகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

புதுவை அரசு மருத்துவமனை, பள்ளிகள், பிரதான சாலைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடப்படும். மேலும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

புதுவை அரசியலில் துணைநிலை ஆளுநா் தலையிடுவதாக பொய்யான புகாரை நாராயணசாமி கூறி வருகிறாா். காவல் துறையில் ஆளும்கட்சியினரின் தலையீடு எதுவும் இல்லை.

புதுவையில் மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கும் திட்டம் ஆரம்ப நிலையில் உள்ளதாக தெரிகிறது. இதை பாஜக வரவேற்கவில்லை. நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகளை அனுமதித்தால் பாஜக எதிா்க்கும் என்றாா் வி.சாமிநாதன்.

பேட்டியின் போது, பாஜக மாநில பொதுச் செயலா் மோகன்குமாா், வி.பி.ராமலிங்கம் எம்எல்ஏ, முருகன், குருசங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.