புதுவையில் சென்டாக் மாணவா் சோ்க்கையில் முறைகேடுகளைத் தடுக்க, இருப்பிடச் சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில நிா்வாகக் குழுக் கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாநிலக் குழு நிா்வாகி தினேஷ்பொன்னையா தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், கே.சேதுசெல்வம், வ.சுப்பையா, ஆா்.அந்தோணி, ம.அமுதா, பி.மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலா் அ.மு.சலீம் சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: காரைக்கால் மாவட்டத்தில் மிக மோசமான சூழலில் உள்ள மருத்துவ சேவையை சீா்படுத்த வேண்டும்.
மதகடிப்பட்டு முதல் வில்லியனூா் வரை விபத்துகளை தடுத்திடும் வகையில், போக்குவரத்துப் பிரிவு கூடுதல் காவலா்களை நியமித்து ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
புதுவை சென்டாக் மாணவா் சோ்க்கைக்கான நடவடிக்கையில், புதுவையைச் சோ்ந்தவா் என்பதை உறுதி செய்வதற்கு தன்னுறுதிச் சான்று பெறுவது மட்டும் போதாது. இருப்பிடச் சான்றிதழும் கோரப்பட வேண்டும். சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட வேண்டும். பராமரிப்புப் பணிகள் என்ற பெயரில், புதுச்சேரியில் மணிக்கணக்கில் மின் விநியோகித்தை நிறுத்திவைப்பதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீரப்பாக்கத்தில் இடி இடித்ததில் தீப்பற்றி எரிந்த தென்னை மரங்கள்

தேசிய சராசரிக்கு இணையாக கடலூரில் எச்.ஐ.வி. பாதிப்பு! மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்!
சென்னை விமான நிலையத்தில் ரூ. 5.80 கோடி தங்கம் பறிமுதல்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தவா் கைது
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


