மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தில் முறைகேடு நடக்கவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி நகர திட்டத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று  புதுவை துணைநிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன் (கோப்புப்படம்).

Published On :

புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று  புதுவை துணைநிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கான தனிப்பிரிவை தொடங்கி வைத்த அவர்  செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தனியார் ஆய்வு தெரியவந்துள்ளது. அது சரியா என அரசு சார்பிலும் ஆய்வு நடத்தி வருகிறோம். ஆனாலும் சர்க்கரை நோய் பிரிவு நோயாளிகளுக்கு டிஜே அளிக்க தனிப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனைத்து சாதனங்களும் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பொலிவுறு நகரத் திட்டத்தில் லஞ்சம் ஊழல் நடைபெற்றால் அதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். இதுகுறித்து அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி உள்ளேன். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் தாமதமானதால் தற்போது அதை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அனைத்து பணிகளும், திட்டங்களும் வெளிப்படையான மத்திய அரசின் வழிகாட்டுதல் படி நிறைவேற்றப்படுகிறது. ஆகவே ஊழல்  என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆதாரமின்றி  குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவது சரியல்ல. மருத்துவமனையில் நோயாளிகள் தரையில் படுக்க வைப்பது குறித்த புகார்கள் உள்ளன. அந்த அறையையும் நேரில் பார்வையிட்டேன். இடபற்றாக்குறையால் அது போன்ற நிலை ஏற்படுகிறது. 

ஆகவே ரூ. 42 கோடி செலவில் புதிதாக அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டவும் ஒப்புதல் வழங்கியுள்ளேன். புதுச்சேரி அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துவமனைக்கு தமிழக பகுதிகளில் இருந்து தான் அதிகமானோர் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.