4-வது திருமணத்துக்கு தடை: மாமியாரை கொல்ல முயன்ற மருமகள் கைது!

புதுவையில் சொத்துக்காகவும், நான்காவது திருமணத்திற்கு தடையாக இருந்த மாமியாரை கூலிப்படை மூலம் கொல்ல முயன்ற மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
4-வது திருமணத்துக்கு தடை: மாமியாரை கொல்ல முயன்ற மருமகள் கைது!

புதுச்சேரி: புதுவையில் சொத்துக்காகவும், நான்காவது திருமணத்திற்கு தடையாக இருந்த மாமியாரை கூலிப்படை மூலம் கொல்ல முயன்ற மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி உருளையன்பேட்டை புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாசாமி. இவரது மனைவி மேரி டெய்சி, 72. இவரது கணவர் மற்றும் மூத்த மகன் இறந்து விட்டனர். இரண்டாவது மகன் குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ளார். இவரது வீட்டின் தரைத்தளம், முதல் தளத்தை வாடகைக்கு விட்டு, 2-வது தாளத்தில் தனியாக வசித்து வந்தார் மேரி. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி இவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், மேரி டெய்சியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பித்தனர்.

இது சம்பந்தமாக உருளையன்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், மூதாட்டிக்கு பணம் கொடுக்கல், வாங்கலில் பலரும் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.  அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், மூதாட்டியின் மூத்த மகன் விஜய் ஆண்டனியின் 2-வது மனைவி குன்னுாரைச் சேர்ந்த ரெபெக்கா வயது 40, தன் கணவருக்கு சேர வேண்டிய சொத்துக்களை எழுதி கொடுக்க மிரட்டி வந்துள்ளார். மேரி டெய்சி சொத்துக்களை கொடுக்க மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரெபெக்கா, கூலி படையினரை வைத்து மேரி டெய்சியை கொலை செய்ய உத்தரவிட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, குன்னுார் விரைந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார், ரெபெக்காவை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த 14 வயது சிறார் உள்பட ராஜேஷ் 27,  சிம்சன்  20, முத்து 19 உள்ளிட்ட நான்கு கூலிப்படையினரை கைது செய்தனர்.

விசாரணையில் ஏற்பட்ட சந்தேகத்தை தொடர்ந்து ரெபெக்கா மற்றும் கூலிபடையினர் 4 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய மொபைல் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்தனர்.

போலீசாரிடம் மருமகள் ரெபெக்கா அளித்த வாக்குமூலத்தில், எனது முதல் கணவர் பெங்களூரை சேர்ந்த கணினி பொறியாளர். அவரை விவாகரத்து செய்ததாகவும் அதனைத் தொடர்ந்து வேலூரை சேர்ந்த கணினி பொறியாளரை திருமணம் செய்து அவரையும் விவாகரத்து செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சேர்ந்த மேரி டெய்சியின் மூத்த மகன் விஜய் ஆண்டனியை 3-வதாக திருமணம் செய்து கொண்டேன். எனது மாமியார் மேரி டெய்சி வீடு வாங்கி விற்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.

இந்நிலையில் எனது 3-வது கணவர் இறந்துவிட்டார். இதனால் அவருக்கு சேர வேண்டிய சொத்துக்களை எனக்கு தரும்படி பலமுறை கேட்டேன். ஆனால் மேரிடெய்சி தரவில்லை. இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலியை சேர்ந்த தனது வீட்டில் 15 வருடங்களாக நாய்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த ராஜேஷ் உதவியுடன் கூலி படையினரிடம் உதவி கேட்டேன். அவர்களுக்கு ரூ. 15 லட்சம் பணம் கொடுத்து மாமியார் கொலை செய்யும்படி கூறினேன் என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

மேலும் எனது மாமியாருக்கு தொழில் ரீதியாக கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் எதிரிகள் இருப்பதால் என் மீது சந்தேகம் வராது என நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை பிடித்துவிட்டனர் தெரிவித்துள்ளனர்.    

இது குறித்து உருளையன்பேட்டை காவல் ஆய்வாளர் பாபுஜி கூறியதாவது:

“மேரிடெய்சியின் மகன் பெயரில் ஒரு கோடி ரூபாய் அளவில் புதுச்சேரியில் வீடும் உள்ளது. அது மட்டும் இல்லாமல் கூவத்தூரில், ஆரோவில் பகுதியில் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடங்களை மருமகளுக்கு கொடுக்க தடையாக இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருமகள் ரூ. 15 லட்சத்தை கூலிப்படையிடம் கொடுத்து மாமியாரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதில் 15 வருடங்களாக அவர் வீட்டில் வேலை செய்த ராஜேஷ் என்பவர் உதவியுடன் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ஒரு சிறார் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், பணத்தின் ஆசை காரணமாக இதுவரை மூன்று திருமணங்கள் செய்துள்ளார். நான்காவது திருமணம் செய்வதற்கு சென்னையில் ஏற்பாடு நடைபெற்று இருந்ததை மாமியார் தடுத்து நிறுத்தி உள்ளார். இந்த இரண்டு சம்பவத்தில் கோபம் அடைந்த மருமகள் மாமியாரை கொலை செய்யும் திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com