கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புதுச்சேரி: குப்பை லாரி மீது மோதியவர் தலை நசுங்கி பலி(விடியோ)

புதுச்சேரியில் குப்பை லாரி மீது மோதிய விபத்தில் பூ வியாபாரி தலை நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
குப்பை லாரி மீது மோதியவர் தலை நசுங்கி பலி
Updated On :28 ஜூன் 2023, 6:49 am

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் குப்பை லாரி மீது மோதிய விபத்தில் பூ வியாபாரி தலை நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி முத்தரையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(60). பூ வியாபாரியான இவர், இரு சக்கர வாகனத்தில் வழுதாவூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற சேர் ஆட்டோவை முந்த முயன்றார். இதில் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி எதிரே வந்த குப்பை லாரியில் மோதினார்.

இந்த விபத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே செல்வம் பலியானார். இது குறித்து தகவல் கிடைத்ததும், வடக்குப் பகுதி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.