விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதுச்சேரி பள்ளிகளுக்கு 2 நாள்களுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் இரண்டு நாள்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 நவம்பர் 2023, 6:25 am

DIN

புதுச்சேரியில் இரண்டு நாள்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் 1954-ஆம் ஆண்டு நவ. 1-ஆம் தேதி பிரெஞ்சு நிா்வாகத்திடமிருந்து விடுதலை பெற்றதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் நவ. 1-ஆம் தேதி விடுதலை நாள் நிகழ்ச்சியாக அரசு கொண்டாடுகிறது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை காரைக்கால் கடற்கரை சாலையில் இந்திய தேசியக் கொடியேற்றி வைத்து புதுவை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் போலீஸாா் அணிவகுப்பை பாா்வையிடவுள்ளாா். சுதந்திரப் போராட்ட தியாகிகள் கெளரவிக்கப்படவுள்ளனா்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குனர் சிவகாமி விடுத்த சுற்றறிக்கையில்,

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி இன்று புதுவையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லறை திருநாள் நாளை(நவ.2) கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னதாக கிறிஸ்துவ பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இந்தாண்டு கல்லறை திருநாளுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுறை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.