புதுச்சேரியிலும் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு!

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேரக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. 
புதுச்சேரியிலும் பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு!

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேரக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 12-ம்(ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்து புதுச்சேரி அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாடு குழுமம் சார்பில் அறிவித்துள்ளது. 

தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

நீதிமன்ற உத்தரவுப்படி, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பசுமைப் பட்டாசுகளை  மட்டும் வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தீபாவளியன்று காற்றின் தரத்தை மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாவட்டம் வாரியாக கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com