

புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13-ஆம் தேதி(திங்கள்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகையானது வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் திங்கள்கிழமை வழக்கம்போல் பள்ளி, அலுவலகங்கள் செயல்படும் சூழல் உள்ளது. இதன் காரணமாக பண்டிகை நாளன்று இரவே சொந்த ஊர்களில் இருந்து புறப்பட வேண்டியுள்ளதால் திங்கள்கிழமை பொது விடுமுறை அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விடுமுறை அறிவித்த நிலையில், புதுச்சேரியிலும் பொது விடுமுறை அளிப்பதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.