விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

'பச்சைக்கிளி முத்துச்சரம்' பட பாணியில் மளிகைக் கடைக்காரரை ஏமாற்றிய இளம் பெண்!

பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்பட பாணியில் ஆசைவார்த்தை கூறி மளிகை கடைக்காரரை கூட்டிச் சென்று பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :25 அக்டோபர் 2023, 8:56 am

DIN

பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்பட பாணியில் ஆசைவார்த்தை கூறி மளிகை கடைக்காரரை கூட்டிச் சென்று பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பச்சைக்கிளி முத்துச்சரம். இதில், மருத்துவ பிரதிநிதியாக வரும் சரத்குமாரிடம் ஆசை வார்த்தை கூறும் ஜோதிகா, அவரை ஹோட்டலுக்கு கூட்டிச் செல்கிறார். இருவரும் தனியாக இருப்பதை தனது ஆண் நண்பர் மூலம் விடியோ எடுக்கும் ஜோதிகா, சரத்குமாரிடம் பணம் கேட்டு மிரட்டுவார். இதேபோன்ற சம்பவம் புதுச்சேரியில் நிகழ்ந்துள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த கருணாகரன்(வயது 50) மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 15-ஆம் தேதி அவரின் கடைக்கு வந்த இளம்பெண் ஒருவர், தனது பெயர் வனிதா(வயது 19) என்றும், கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிப்பதாகவும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

வனிதா

வனிதா

தொடர்ந்து, பெற்றோர்கள் இல்லாததால் தனது உறவினர் வீட்டில் தங்கி படிப்பதாகவும், தற்போது அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறிய வனிதா, கருணாகரனின் வீட்டின் மாடியில் உள்ள அறையை வாடகைக்கு கேட்டுள்ளார். இரண்டு நாள்கள் கழித்து பதிலளிப்பதாக கருணாகரன் கூறியுள்ளார்.

இதற்கிடையே கருணாகரனின் செல்போன் எண்ணுக்கு போன் செய்து வனிதா அன்பாக பேசத் தொடங்கியுள்ளார். பின்னர், கடந்த 19-ஆம் தேதி கருணாகரனுக்கு போன் செய்த வனிதா, தான் வில்லியனூரில் உள்ள ஜூஸ் கடையில் இருப்பதாகவும், அங்கு ஜூஸ் குடிக்க வரும்படியும் கூறியுள்ளார்.

வனிதாவின் அழைப்பை ஏற்று சென்ற கருணாகரனிடம், “நீங்கள் வயதில் மூத்தவராக இருந்தாலும் பரவாயில்லை. நாம் ஒருநாள் தனியாக வெளியே செல்லலாம்.” என்று கூறியுள்ளார்.

வனிதாவின் ஆசை வார்த்தையில் மயங்கிய கருணாகரன் அன்று இரவே தனது இருசக்கர வாகனத்தில் வனிதாவை கூட்டிக் கொண்டு கனுவாப்பேட்டை அருகேவுள்ள பம்ப் ஹவுஸ் பகுதியில் தனியாக இருக்க முயற்சித்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த மூன்று நபர்கள் நிர்வாணமாக இருந்த கருணாகரனையும், வனிதாவையும் மடக்கிப் பிடித்துள்ளனர். வனிதாவை அங்கிருந்து புறப்படச் சொன்ன அந்த நபர்கள், ரூ. 2 லட்சம் கொடுக்கவில்லை என்றால் சமூக ஊடகங்களில் நிர்வாண படங்களை பகிர்வோம் என்று கருணாகரனை மிரட்டியுள்ளனர்.

Story image

உடனடியாக தன்னிடம் இருந்த ரூ. 50 ஆயிரத்தையும், தனது நண்பரிடம் ரூ.75 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் கடன் வாங்கியும் மொத்தம் ரூ. 1.25 லட்சத்தை கருணாகரன் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த காவலர்கள் பணம் அனுப்பிய ஜி-பே எண்ணை சோதனை செய்ததில் பணப் பறிப்பில் ஈடுப்பட்டது கணுவாப்பேட்டையை சேர்ந்த பப்லு என்கிற பிரகாஷ்(21) மற்றும் ராமு(22) எனத் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்து நடத்திய விசாரணையில், ராமு மனைவியின் நண்பரான கல்லூரி மாணவி வனிதா மூலமாக அதிக பணம் வைத்துள்ள கருணாகரனிடம் பணம் பறிக்க திட்டமிட்டதும், இதற்காக அருண் என்பவரையும் உடன் சேர்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், வனிதா மற்றும் அருணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்பட பாணியில் ஆசைவார்த்தை காட்டி மளிகை கடைக்காரரிடம் கல்லூரி மாணவி பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.