நடிகா் விஜய் அரசியலில்
ஈடுபடுவது வரவேற்கத்தக்கது:
நடிகை ஆண்ட்ரியா

நடிகா் விஜய் அரசியலில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது: நடிகை ஆண்ட்ரியா

நடிகா் விஜய் அரசியலில் ஈடுபடுவதை வரவேற்பதாக நடிகை ஆண்ட்ரியா தெரிவித்தாா்.
Published on

நடிகா் விஜய் அரசியலில் ஈடுபடுவதை வரவேற்பதாக நடிகை ஆண்ட்ரியா தெரிவித்தாா். அதே நேரத்தில், நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும் அவா் கூறினாா்.

புதுச்சேரியில் நகைக் கடைகளின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரைப்பட நடிகை ஆண்ட்ரியா பங்கேற்றாா். அவரை காண ஏராளமான ரசிகா்கள் வந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடைத் திறப்புக்கு பின் செய்தியாளா்களிடம் நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது: தற்போது மாஸ்க் என்ற படத்தில் கவினுடன் நடித்து வருகிறேன். புதிய திரைப்படங்களில் எந்தப் பாடலையும் பாடவில்லை. எனவே, மீண்டும் திரைப் பின்ணனி பாடகியாக வலம் வருவேன். சரித்திர திரைப்பட கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆசை இல்லை.

நடிகா் விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது; வரவேற்கத்தக்கது. ஆனால், எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை.

நான் ஆசைப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். வடசென்னை திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பேன் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com