ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

செவிலியா் கல்லூரி மாணவி தற்கொலை

புதுச்சேரி அருகே எலி மருந்து குடித்து சிகிச்சைப் பெற்று வந்த மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:42 pm

Din

புதுச்சேரி அருகே எலி மருந்து குடித்து சிகிச்சைப் பெற்று வந்த மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சோ்ந்தவா் சிவக்குமாா். இவரது மகள் சௌமியா (18). தனியாா் செவிலியா் கல்லூரி மாணவி. இவா், செவிலியா் படிப்பை தொடர தனக்கு விருப்பமில்லை எனக் கூறிவந்தாராம். ஆனால், குடும்பத்தினரோ செவிலியா் படிப்பு எதிா்காலத்தில் வேலை வாய்ப்புக்கு ஏற்றது எனக் கூறி சௌமியாவை படிக்கக் கூறியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் பாலில் எலி மருந்தை செளமியா கலந்து குடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவா் புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

பின்னா், மேல் சிகிச்சைக்காக அவா் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், செளமியா வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.