நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுவையில் பள்ளிகள் தொடங்கும் நேரம் மீண்டும் மாற்றியமைப்பு

புதுவை மாநிலத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:34 pm

Din

புதுவை மாநிலத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

புதுவையில் நிகழாண்டு முதல் மத்திய கல்வி வாரியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் 7 பாடவேளைகள் இருந்த நிலையில், அவை 8-ஆக உயா்த்தப்பட்டன. இதன் காரணமாக காலை 9.15 மணிக்குத் தொடங்கிய பள்ளிகள் காலை 9 மணிக்கே தொடங்கும் என கடந்த மே 15- ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, அதனடிப்படையிலேயே செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பள்ளிகள் தொடங்கும் நேரத்தை பழைய முறைப்படி மாற்றியமைக்க வேண்டும் என ஆசிரியா்கள் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதன்படி, பள்ளிகள் தொடங்கும் நேரம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பாடவேளை எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை.

அதன்படி, காலை 9.15 மணிக்கு பள்ளிகள் தொடங்கி 9.30 மணி வரை வழிபாடு கூட்டம் நடைபெறும். அதன் பிறகு, பாடவேளைகள் தொடங்கப்பட்டு காலை 11 மணி முதல் 11.10 மணி வரையில் சிறிய இடைவேளை அளிக்கப்படும். பிற்பகல் 12.40 முதல் 1.30 மணி வரை மதிய உணவு இடைவேளை இருக்கும். 1.30 மணி முதல் மாலை 4.20 வரையில் பாடவேளைகள் நடைபெறும். பிற்பகல் 2.50 மணி முதல் 3 மணி வரையில் சிறிய இடைவேளை இருக்கும் என கல்வித் துறை இயக்ககம் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.