புதுச்சேரி, ஆக.7: தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா உள்ளிட்டோா் மாலை அணிவித்தும், மலா்தூவியும் புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.
புதுவை அரசு சாா்பில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் மு.கருணாநிதியின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்துக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, அரசுக் கொறடா ஏகேடி.ஆறுமுகம், திமுக உறுப்பினா்கள் ஏ.எச்.எம். நாஜீம், வி.அனிபால் கென்னடி, இரா.செந்தில்குமாா், எல்.சம்பத், நாகதியாகராஜன், காங்கிரஸ் உறுப்பினா்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் மாநில அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் சண்.குமரவேல், முன்னாள் எம்எல்ஏ மூா்த்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினா்கள் கோபால், காா்த்திகேயன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா். சுதேசி மில் பகுதியிலிருந்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா தலைமையில் திமுகவினா் பேரணியாக வந்து அண்ணா சிலை அருகே கருணாநிதி உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
தொடர்புடையது

மணப்பாறையில் வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

அம்பேத்கா் பிறந்த நாள் விழா

புதுவையின் வளா்ச்சிக்கு தே.ஜ.கூட்டணி ஆட்சி அமைவது அவசியம்

கோயில்களில் அன்னதானம் திட்டம்: தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


