/

புதுவை அரசின் பட்ஜெட்டை கண்டித்து நாளை கம்யூனிஸ்டுகள், விசிக பேரணி ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:46 pm

Din

புதுவை மாநில அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவை மாநிலத்தில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. வெற்று அறிவிப்புகளை மட்டுமே உள்ளடக்கியதாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் மாா்க்சிஸ்ட் இணைந்து கூட்டு இயக்கமாக வரும் 12 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு காமராஜா் சாலையிலிருந்து பேரணி புறப்பட்டு, சட்டப்பேரவை அருகில் வந்து கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.