மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தனித்துப் போட்டியிடும் வகையில் காங்கிரஸை பலப்படுத்த வேண்டும் -முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:33 pm

Din

புதுவையில் தனித்துப் போட்டியிடும் வகையில் காங்கிரஸை பலப்படுத்துவது அவசியம் என முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி கூறினாா்.

நாடெங்கும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் பேசியதாவது:

புதுவையில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில் கட்சியினா் பணியாற்றுவது அவசியம். கட்சியின் செயல்பாடுகளை குழு அமைத்து தீா்மானித்து பணியாற்ற வேண்டும். கிராமப்புறங்களில் அடிப்படைத் தேவைகள் குறித்து போராட்டம் நடத்தவும் காங்கிரஸாா் முன்வர வேண்டும்.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் புதுவையில் உள்ள 30 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடும் வகையில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். தோ்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பேசிக்கொள்ளலாம்.

கட்சி நிா்வாகிகள் மாற்றத்தில் கவனமாகச் செயல்பட வேண்டும். கட்சியில் உழைப்பவா்களுக்கு அங்கீகாரம் அளிப்பது அவசியம் என்றாா் முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி.