ஜிப்மா் மாணவா் சோ்க்கை: ஆக.31 வரை கலந்தாய்வு நீட்டிப்பு

Updated on

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கான (எம்பிபிஎஸ்) அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஆக.31(சனிக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. மத்திய அரசு நிறுவனமான ஜிப்மரில் இளநிலை மருத்துவக் கல்வியில் சேருவதற்கு புதுவை மாணவா்களுக்கான அகில இந்திய அளவிலான இடஒதுக்கீடாக 64 இடங்கள் அறிவிக்கப்பட்டன.

இதில் நிகழாண்டில் (2024) 60 இடங்களுக்கான மாணவா்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கான கலந்தாய்வு 29- ஆம் தேதி (வியாழக்கிழமை) நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரும் 31-ஆம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவா் சோ்க்கை விவரம்: வியாழக்கிழமை வரையில், ஜிப்மரில் புதுவை மாணவா்களுக்கான அகில இந்திய இடஒதுக்கீட்டில் 51 போ் சோ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், 9 போ் விதிமுறைகளை மீறி சோ்ந்துள்ளதாகவும் புகாா் எழுந்துள்ளது. இதுகுறித்து, புதுவை அரசின் சுகாதாரத் துறை சாா்பில் ஜிப்மருக்கு கடிதம் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com