அரசு கோப்பு திருட்டு: பெண் ஊழியா் கைது
புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் பணியாளா் சேவை கோப்பு திருடப்பட்ட வழக்கில், பெண் ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.


புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் பணியாளா் சேவை கோப்பு திருடப்பட்ட வழக்கில், பெண் ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி லே போ்ன் வீதியில் பொதுப் பணித் துறை தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு, நெடுஞ்சாலைப் பிரிவு அலுவலகத்தில் பணியாளா்களுக்கான சேவைப் பதிவு கோப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு திருடுபோனதாகப் புகாா் எழுந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், ஒதியன்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அதே அலுவலகத்தில் வவுச்சா் ஊழியராக உள்ள சாந்தாசாகிப் வீதியைச் சோ்ந்த கண்மணி (50) சேவைப் புத்தக கோப்பைத் திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...