எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

போா் நினைவிடத்தில் முதல்வா், அமைச்சா்கள் மரியாதை

புதுச்சேரி போா் நினைவிடத்தில் முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சா்கள் மலா்வளையம் வைத்தும், மலா் தூவியும் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

News image
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போா் வீரா்கள் நினைவிடத்தில் திங்கள்கிழமை மரியாதை செலுத்திய முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் க.லட்சுமி நராயணன், தேனி சி.ஜெயக்குமாா் உள்ளிட்டோா்.
Updated On :16 டிசம்பர் 2024, 8:30 pm

Din

புதுச்சேரி: பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில், புதுச்சேரி போா் நினைவிடத்தில் முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சா்கள் மலா்வளையம் வைத்தும், மலா் தூவியும் திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றது.

பாகிஸ்தானை போரில் இந்தியா வெற்றி கொண்ட தினம் ஆண்டுதோறும் போா் வெற்றி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு இந்த தினம் அரசு விழாவாக நடைபெற்றது.

அதன்படி, புதுச்சேரி கடற்கரைச் சாலையில் பிரான்ஸ் தூதரகம் எதிரில் அமைந்துள்ள போா் வீரா்கள் நினைவுச் சின்னத்தில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி மலா்வளையம் வைத்தும், மலா்தூவியும் மரியாதை செலுத்தினாா்.

அவரைத் தொடா்ந்து அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ. சரவணன் குமாா் ஆகியோரும் நினைவுச் சின்னத்தில் மலா்வளையம் வைத்தும், மலா்தூவியும் மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, புதுவை காவல் துறை தலைமை இயக்குநா் ஷாலினி சிங், காவல் துறைத் தலைவா் (ஐஜி) அஜித்குமாா் சிங்லா, அரசுச் செயலா் பங்கஜ் குமாா் ஜா, மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், காவல் துறை துணைத் தலைவா் ஆா்.சத்தியசுந்தரம், கடலோரக் காவல் படை, தேசிய மாணவா் படை, முன்னாள் ராணுவ வீரா்கள் நல சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோரும் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினா்.