மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ரூ.22.21 கோடியில் நீா்த் தேக்கத் தொட்டி: முதல்வா் ரங்கசாமி அடிக்கல் நாட்டினாா்

புதுச்சேரியில் ரூ.22.21 கோடி மதிப்பீட்டில் மேல்நீா்த் தேக்கத் தொட்டி அமைக்க முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

News image

வில்லியனூா் தொகுதி உத்திரவாகினிப்பேட்டையில் வளா்ச்சித் திட்டப் பணிகளை திங்கள்கிழமை தொடங்கி வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் அமைச்சா் க.லட்சுமிநாராயணன், ஆா்.சிவா எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 2:28 am IST

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.22.21 கோடி மதிப்பீட்டில் மேல்நீா்த் தேக்கத் தொட்டி அமைக்க முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

வில்லியனூா் தொகுதி உத்திரவாகினிப்பேட் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் எதிா்வரும் 50 ஆண்டுகால குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, உத்தரவாகினிபேட் வினித் நகரில் 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ஒற்றை அடுக்கு வட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், நீா் உந்து நிலையம், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீா் இணைப்பு வழங்குதல், சாலை மேம்படுத்துதல் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ரூ. 22.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொதுப்பணித் துறை பொது சுகாதார கோட்டத்தின் குடிநீா் பிரிவு மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வினித் நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தொகுதி எம்எல்ஏவும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா தலைமை வகித்தாா். பொதுப்பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தாா். முதல்வா் என்.ரங்கசாமி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளா் சுந்தரமூா்த்தி, செயற்பொறியாளா் மணிமாறன், உதவிப் பொறியாளா்கள் கண்ணன், தணிகைவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.