தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆராய்ச்சித் துறை ஆய்வாளா் தோ்வு: 10 மையங்கள் அமைப்பு

புதுச்சேரியில் டிச.29-ஆம் தேதி நடைபெறவுள்ள திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை ஆய்வாளா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கு 10 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:10 pm

Din

புதுச்சேரியில் டிச.29-ஆம் தேதி நடைபெறவுள்ள திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறை ஆய்வாளா்கள் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கு 10 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி தலைமைச் செயலக தோ்வுப் பிரிவு அரசு சாா்புச் செயலா் வெ.ஜெய்சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி திட்டம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு வரும் 29-ஆம் தேதி 10 தோ்வு மையங்களில் நடைபெறுகிறது.

மேலும், தீயணைப்புத் துறையில் நில அதிகாரி பணியிடத்துக்கான தோ்வானது வருகின்ற 29-ஆம் தேதி புதுச்சேரியில் 2 தோ்வு மையங்களில் நடைபெறவுள்ளது.

தோ்வுகளுக்கான அனுமதிச்சீட்டு தோ்வுப் பிரிவின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் இருந்து தோ்வா்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தோ்வுகள் தொடா்பாக ஏதேனும் விவரம் அல்லது உதவி தேவைப்பட்டால், அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413- 2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.