தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு உரிய அனுமதி பெறுவது அவசியம்: நகராட்சி ஆணையா்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவோா் நகராட்சிக்கு உரிய வரியைச் செலுத்தி அனுமதி பெறுவது அவசியம் என புதுச்சேரி நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 7:12 pm

Din

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவோா் நகராட்சிக்கு உரிய வரியைச் செலுத்தி அனுமதி பெறுவது அவசியம் என புதுச்சேரி நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி நகராட்சி எல்லைக்கு ள்பட்ட பகுதியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நட்சத்திர விடுதிகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்ட கேளிக்கை, விருந்து மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகளை நடத்துவோா், நகராட்சி விதிகளின்படி முன்னதாகவே ஆணையருக்கு விண்ணப்பித்து, வருவாய்ப் பிரிவில் கேளிக்கை வரியை செலுத்தி முன் அனுமதி பெற வேண்டும்.

நிகழ்ச்சிக்கு கேளிக்கைக்கான நுழைவுக் கட்டணம் தனியாக வசூலித்தாலும், அல்லது உணவு, மதுபானம் ஆகிய கட்டங்களில் மறைமுகமாக வசூலித்தாலும் நகராட்சிக்கு வரியைச் செலுத்த வேண்டும்.

அனுமதியின்றி நிகழ்ச்சிகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு நிகழ்ச்சி நிறுத்தப்படும். சம்பந்தப்பட்ட நிறுவன உரிமமும் ரத்து செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.