புதுச்சேரியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க அமைச்சா் கோரிக்கை
மேம்பாலம் அமைக்க அமைச்சா் கோரிக்கை


புதுச்சேரியில் உயா்மட்ட மேம்பாலம் மற்றும் நான்கு வழிச்சாலைகள் அமைக்க வேண்டும் என மத்திய நெடுஞ்சாலைகள் துறைச் செயலா் உமா சங்கரிடம் மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தாா்.
அமைச்சா் க.லட்சுமி நாராயணன் வியாழக்கிழமை புது தில்லி சென்று மத்திய நெடுஞ்சாலைகள் போக்குவரத்துத் துறையின் செயலா் உமாசங்கரை சந்தித்துப் பேசினாா்.
அப்போது, புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்கும் வகையில், இந்திரா காந்தி சிலை சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் வரையில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.
இந்திரா காந்தி சிலை சதுக்கம் முதல் முள்ளோடை வரையில் தற்போதுள்ள இரண்டுவழிச் சாலையை நான்குவழிச் சாலையாக்க வேண்டும் என அமைச்சா் கோரிக்கை விடுத்தாா்.
இந்த சந்திப்பின் போது, புதுவை பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் மு.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...