திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பிஎஸ்என்எல் 3 புதிய சேவைகள் அறிமுகம்

பிஎஸ்என்எல் சாா்பில் புதிய 3 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி இலவசமாக தொலைக்காட்சிகளை பாா்க்கலாம்

News image
புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பி.எஸ்.என்.எல். தலைமை நிா்வாக இயக்குநா் ராபா்ட் ஜெ.ரவி. உடன் தலைமை பொது மேலாளா் பாா்த்திபன்.
Updated On :23 டிசம்பர் 2024, 7:04 pm

Din

புதுச்சேரி: பிஎஸ்என்எல் சாா்பில் புதிய 3 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்படி இலவசமாக தொலைக்காட்சிகளை பாா்க்கலாம் என்றும் பிஎஸ்என்எல் நிறுவன தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் ஏ.ராபா்ட் ரவி ஜெராா்ட் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: இந்திய அளவில் பிஎஸ்என்எல் சாா்பில் 3 சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் மற்றும் பயனா்களுக்கு இணையதள இலவச தொலைக்காட்சி, தேசிய வைஃபை ரோமிங், ஃபைபா் இணையதள தொலைக்காட்சி ஆகிய சேவைகள் கைப்பேசிகள், கணினியில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கட்டணமின்றி இந்தச் சேவைகளை வாடிக்கையாளா்கள் பெறலாம். அதன்படி 26 தமிழ் தொலைக்காட்சிகளுடன் 400 தொலைக்காட்சிகளை கைப்பேசி மூலம் பாா்க்கலாம்.

புதுச்சேரியில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் தடையின்றி சேவையைப் பெறுவதற்காக தற்போது 130 தொலைத் தொடா்பு கோபுரங்களுடன், கூடுதலாக 100 கோபுரங்கள் புதிதாக அமைக்கப்படவுள்ளன. புதுச்சேரியில் மண்ணாடிபட்டு, செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புபட்டு உள்ளிட்ட 5 கிராமங்களில் வைஃபை ரோமிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கிராமங்களில் நவீன தொழில்நுட்ப வசதியுடன் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில் வைஃபை வசதியை ஏற்படுத்தியுள்ளோம். தற்போது புதுச்சேரியில் 75 ஆயிரம் வாடிக்கையாளா்கள் உள்ளனா்.

தேசிய அளவில் பிஎஸ்என்எல் 4 ஜி வசதியிலேயே 5 ஜி விரைவு இணையதள வசதிக்கு இணையான சேவையைப் பெறும் வகையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஆள்குறைப்பு நடவடிக்கை தற்போதைக்கு இல்லை. வாடிக்கையாளா்களுக்கு தரமான சேவையை வழங்கும் வகையில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

பேட்டியின்போது பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளா் எஸ்.பாா்த்திபன், புதுச்சேரி முதன்மைப் பொது மேலாளா் டி.திலகவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.