தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சுனாமி நினைவு தினம்: புதுவை ஆளுநா், முதல்வா் மரியாதை

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு

News image

சுனாமி நினைவு தினத்தையொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை பின்புறத்தில் உள்ள கல்லில் வியாழக்கிழமை பால் ஊற்றி மரியாதை செலுத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா்.

Updated On :26 டிசம்பர் 2024, 7:06 pm

Din

புதுச்சேரி கடற்கரையில் சுனாமி பாதிப்பின் 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் கடலோரக் கல்லில் வியாழக்கிழமை பால் ஊற்றி மரியாதை செலுத்தினா்.

கடந்த 2004-ஆம் ஆண்டு டிச.26-ஆம் தேதி கடலில் ஏற்பட்ட சுனாமி அலை தாக்குதலால் புதுவையில் 500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

கடலோர மீனவக் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய அந்த சுனாமியின் நினைவு தினம் ஆண்டுதோறும், டிச.26-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி, 20-ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பு நினைவு தினம், புதுவை அரசு சாா்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை பின்புறம் நடைபெற்றது.

சுனாமி பேரலை தாக்கிய கோர சம்பவ புகைப்படங்கள் பதாகையில் பொறிக்கப்பட்டிருந்தன. துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், சாய் ஜெ.சரவணன்குமாா் ஆகியோா் மலா் வளையம் வைத்தும், அங்கிருந்த கல்லில் பால் ஊற்றியும் மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், ஜி.நேரு, ஆா்.பாஸ்கா், யு.லட்சுமிகாந்தன், கே. பிரகாஷ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

இதேபோல, புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் சோனாம்பாளையம் சந்திப்பில் நடைபெற்ற சுனாமி நினைவஞ்சலி நிகழ்ச்சியில் அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் பங்கேற்று மரியாதை செலுத்தினாா்.

தமிழ்நாடு மீனவா்கள் பேரவை சாா்பில், புதுச்சேரி தலைவா் ஜி.குணசீலன் மற்றும் அன்பழகனாா், தேசிய மீனவா் பேரவை இளங்கோ உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.