சேலத்தில் லாரி மீது கார் மோதியதில் மருத்துவ மாணவர்கள் இருவர் பலி

சேலத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் மருத்துவ மாணவர்கள் இருவர் பலி. மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
சேலத்தில் லாரி மீது கார் மோதியதில் மருத்துவ மாணவர்கள் இருவர் பலி

சேலம்: புதுச்சேரியில் படிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வந்த கார், சேலம் அருகே பனமரத்துப்பட்டி பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியதில் காரில் இருந்த இரண்டு மருத்துவ மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் அருகே, நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பனமரத்துப்பட்டி பொய்மான் கரடு, பிரபல உணவகம் முன்பாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, பின்னால் வந்த கார் ஒன்று பலமாக மோதியது. இதில் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்து வந்த மாணவர்கள் கௌதம் (வயது 20) சேலம், மற்றும் காம்கோ (வயது 21) கன்னியாகுமரி ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் மருத்துவ மாணவர்கள் ஜெகநாத் (வயது 21) சேலம், சத்திய பிரவீன் (வயது 21) கன்னியாகுமரி, தரண் (வயது 23) சேலம் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் பனமரத்துப்பட்டியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்று விட்டு, திரும்பி வரும்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது இன்று அதிகாலை 1 மணி அளவில் வேகமாக மோதியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கௌதம் மற்றும் காம்கோ ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

இருவரின் உடலும் சேலம் அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து மல்லூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com