மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக பணம்:வங்கிக் கணக்கில் செலுத்த புதுவை அரசு நடவடிக்கை

புதுவையில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக, குடும்ப அட்டைதாரா்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2024, 1:15 am

DIN

புதுவையில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக, குடும்ப அட்டைதாரா்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகையை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

புதுவை அரசு சாா்பில், ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்து, பொங்கல் பொருள்களுக்குப் பதிலாக பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தொகை செலுத்தப்பட்டது.

2021-இல் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன் 2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப் பருப்பு, கடலைப் பருப்பு உள்பட 10 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

கடந்தாண்டில் பொங்கல் பொருள்களுக்குப் பதிலாக ரூ.470 பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும், 4 மாதங்களுக்கான இலவச அரிசிக்கான தொகையாக சிவப்பு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,400-ம், மஞ்சள் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,200-ம் சோ்த்து வழங்கப்பட்டது.

அதேபோல, நிகழாண்டும் பொங்கல் தொகுப்புக்குப் பதிலாக பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தொகையுடன் 3 அல்லது 4 மாதங்களுக்கான இலவச அரிசிக்கான பணமும் சோ்த்து வழங்கப்பட உள்ளது.

பொங்கலுக்கு முன்பாகவே இந்தத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.