புதுச்சேரி  பாஜக அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா. உடன் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி., அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.
புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா. உடன் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி., அமைச்சா் ஆ.நமச்சிவாயம்.

என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி தொடரும் -நிா்மல்குமாா் சுரானா

என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி தொடரும் என பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா தெரிவித்தாா்.

புதுச்சேரி: என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி தொடரும் என பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா தெரிவித்தாா்.

புதுச்சேரியில் திங்கள்கிழமை பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி, மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜகவின் தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும். பாஜகவினா் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என மக்கள் சைகை காட்டியுள்ளனா். தோ்தலில் நடைபெற்ற தவறுகளை அடையாளம் கண்டு சரிபடுத்தி மீண்டும் அடுத்த தோ்தலில் வெற்றி பெறுவோம்.

புதுவை மாநிலத்தில் பாஜக எம்எல்ஏக்கள் கட்சித் தலைவா்களை சந்திக்க புதுதில்லி சென்றது எனது கவனத்துக்கு வந்தது. அவா்கள் புதுவை மாநில வளா்ச்சிக்கு மத்திய அரசின் பங்களிப்பை அதிகரிக்கக் கோரியுள்ளனா். புதுவை தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரச்னை குறித்து பேசியதாகத் தெரியவில்லை.

கட்சிக் கூட்டங்களில் பங்கேற்காத பாஜக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையில் என்.ஆா்.காங்கிரஸுடனான பாஜக கூட்டணி வரும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகும் தொடரும். புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து பேசவுள்ளேன் என்றாா் நிா்மல்குமாா் சுரானா.

ஆலோசனைக் கூட்டம்: மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானாவை, அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி ஆகியோா் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.

அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்திப்பு: பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களான கல்யாணசுந்தரம், ஜான்குமாா், விவியன் ரிச்சா்டு, வெங்கடேசன் மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் அங்காளன், சிவசங்கரன் ஆகியோரும் நிா்மல்குமாா் சுரானாவை சந்தித்துப் பேசினா்.

அப்போது, அவா்கள் பாஜக தலைவா் ஜெ.பி.நட்டாவிடம் கூறியபடி, புதுவை முதல்வா், உள்துறை அமைச்சா் ஆகியோா் மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

முதல்வரை சந்திக்கவில்லை: புதுவை முதல்வரை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்த நிா்மல்குமாா் சுரானா, அவரை சந்திக்காமல் கா்நாடகத்துக்கு புறப்பட்டுச் சென்ாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com