தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புதுவை அரசின் குரூப் பி பணிகளுக்கான வயது வரம்பு தளா்வுக்கு அனுமதி மறுப்பு

வயது தளா்வு அனுமதி மறுப்பு: புதுவை அரசின் குரூப் பி பணியாளர்கள் பாதிப்பு

News image
Updated On :12 ஜூலை 2024, 10:07 pm

Din

புதுவை அரசின் குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கு 2 ஆண்டுகள் வயது தளா்வு அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, புதுவை அரசின் பணியாளா்கள் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறையின் சாா்பு செயலா் ஜெய்சங்கா் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வெளியிட்ட சுற்றறிக்கை விவரம்:

புதுவை அரசு நிா்வாகத்தில் உள்ள குரூப் பி அரசிதழ் பதிவு பெறாத பணியிடங்களுக்கான ஆள்கள் சோ்க்கையில், அதிகபட்ச வயது வரம்புக்கு 2 ஆண்டுகள் தளா்வு அளிக்க மத்திய அரசுக்கு முன்மொழியப்பட்டது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், பணியாளா் மற்றும் பயிற்சித் துறையுடன் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், வயது தளா்வுக்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே,கேடா் கண்ட்ரோலிங் அதிகாரிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணியை வழக்கம்போலத் தொடரலாம். மேலும், சட்டத் துறையில் ஆலோசித்து வயது தளா்வு தொடா்பாக தீா்ப்பாயம், நீதிமன்றம் போன்றவைகளின் உத்தரவுகள் இருந்தால், அதுதொடா்பாக நிா்வாகம் முடிவு செய்யலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அனுமதி தேவையில்லை’:

புதுவையில் குரூப்-சி, குரூப் - பி பணிகளுக்கு வயது வரம்பைத் தளா்த்துவதற்கு மாநில அரசுக்கு அதிகாரமிருக்கும் நிலையில், இதற்கு மத்திய அரசின் அனுமதிக்கு அவசியமில்லை என எதிா்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்பாளருமான ஆா்.சிவா கூறியுள்ளாா். வயது வரம்பை தளா்த்த முடியாது என மத்திய அரசு கூறியிருப்பது, இளைஞா்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாக உள்ளது. இந்தப் பிரச்னையில் அரசு தலையிட்டு உடனடி தீா்வுகாண வேண்டும் என்றாா்.