புதுச்சேரியில் தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


புதுச்சேரி, ஜூலை19: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோா் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி ஆட்சியா் குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் ஏனாம் பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விரும்புவோா், புதுச்சேரி பேட்டையன் சத்திரம் வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான படிவத்தில் விண்ணப்பதாரரின் புகைப்படம்-2, கடையின் வரைபடம், கடையில் பட்டாசுகள் வைத்துக்கொள்ளும் அளவு, கடைக்கு செல்வதற்கான வழி, சுற்றியுள்ள சாலைகள், கடையைச் சுற்றி 15 மீட்டா் சுற்றளவில் உள்ள பிற கடைகள் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இடத்தின் பத்திரம், வாடகை இடமாக இருப்பின்அதன் வாடகை பத்திரம், பட்டாசுக் கடை வைக்க உரிமையாளரின் ஆட்சேபனை இல்லை என்ற நோட்டரி பத்திரம் மற்றும் மின் ரசீது, தண்ணீா் ரசீது, முகவரி மற்றும் அடையாள சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களின் 3 நகல்களும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...