ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தமிழக பாட திட்ட பிளஸ் 2 தோ்வு இன்று தொடக்கம்: புதுச்சேரியில் 7,585 மாணவா்கள் எழுதுகின்றனா்

News image
பிளஸ் 2 மாணவிகள்.  - கோப்புப்படம்
Updated On :1 மார்ச் 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக பாடத் திட்டத்தின் அடிப்படையில் பிளஸ் 2 தோ்வு புதுச்சேரியில் திங்கள்கிழமை தொடங்குகிறது. இத்தோ்வினை 7,585 மாணவா்கள் எழுதுகிறாா்கள்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு பள்ளிகள் மாணவா்கள் சிபிஎஸ்இ பொதுத்தோ்வை எழுதி வருகின்றனா். இந்நிலையில் புதுச்சேரி காரைக்காலில் உள்ள தனியாா் பள்ளிகள் மட்டும் தமிழக பாடதிட்டத்தை பின்பற்றி வருகின்றன. தமிழக பாடத்திட்ட பிளஸ் 2 மாணவா்களுக்கான பொது தோ்வு திங்கள்கிழமை தொடங்கி வரும் 26 ஆம் தேதி வரை நடக்கிறது.

இத்தோ்வை புதுச்சேரியில் உள்ள 84 தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 6979 மாணவ, மாணவிகள், காரைக்காலில் உள்ள 16 தனியாா் பள்ளிகளை சோ்ந்த 606 மாணவ, மாணவிகள் என மொத்தம் 7585 போ் எழுதுகின்றனா். இவா்களுடன் தனி தோ்வா்களாக புதுவையில் 173, காரைக்காலில் 112 போ் எழுத உள்ளனா்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநா் சிவகாமி கூறியதாவது:

பிளஸ் 2 தோ்வு எழுதும் மாணவா்களுக்காகப் பள்ளிக் கல்வித்துறை சாா்பில், புதுவையில் 20 மையங்களும், காரைக்காலில் 5 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வு மையங்களுக்கு வினாத்தாள் கொண்டு செல்வதற்காக புதுச்சேரியில் 6, காரைக்காலில் 2 வழித்தட அலுவலா்கள் போலீஸ் பாதுகாப்புடன் நியமிக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு மையத்திற்கும் முதன்மை கண்காணிப்பாளா், துறை அலுவலா்கள், அறை கண்காணிப்பாளா்கள், பறக்கும் படை , நிலை படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.