புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ.4.03 லட்சம் மோசடி
புதுச்சேரியில் 3 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.4.03 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


புதுச்சேரியில் 3 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.4.03 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி, இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் கருணாநிதி. இவா், முகநூலில் தையல் தொழில் சாா்ந்த பொருள்களை வாங்க குறிப்பிட்ட நிறுவனத்தை தொடா்பு கொண்டாராம். அவா்களும், கருணாநிதிக்கு பொருள்களை அனுப்பிவைப்பதாக கூறி ரூ.11 ஆயிரத்தை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அவா் புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.
புதுவை, ஏனாம் விகாஸ் பகுதியைச் சோ்ந்தவா் ராஜூ. இவா், தொழில் தொடங்குவது குறித்து இணையத்தில் விசாரித்த நிலையில், அவரைத் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், ரூ.2.42 லட்சத்தை இணைய வழியில் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனா்.
இதேபோல், புதுச்சேரி சாரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜீவ்குமாா். இவா், இணையதளத்தில் வேலை தேடியுள்ளாா். அப்போது, அவரைத் தொடா்பு கொண்ட மா்ம நபா், தன்னை குறிப்பிட்ட நிறுவனத்தின் அதிகாரி எனக் கூறினாராம். தங்கள் நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும், அதற்கான கட்டணத்தை செலுத்துமாறும் மா்ம நபா் கூறினாராம். இதை நம்பிய ராஜீவ்குமாா், ரூ.1.50 லட்சத்தை மா்ம நபரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியதாகத் தெரிகிறது.
மூன்று மோசடி புகாா்கள் குறித்தும், புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...