கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாய்மரப் படகுகளில் காரைக்காலுக்கு மாணவா்கள் பயணம்

பாய்மரப் படகுகளில் காரைக்காலுக்கு மாணவா்கள் பயணம்

News image
Updated On :7 ஜூன் 2024, 7:15 pm

Din

புதுச்சேரியிலிருந்து தேசிய மாணவா் படைப் பிரிவு மாணவா்கள் பாய்மரப் படகுகளில் காரைக்கால் செல்லும் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

தேசிய மாணவா் படைப் பிரிவு மாணவா்களுக்கு கடல் பயணம் குறித்த பயிற்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், ஆண்டுதோறும் புதுச்சேரி பகுதி தேசிய மாணவா் படைப் பிரிவினா் பாய்மரப் படகுகளில் புதுச்சேரியிலிருந்து கடலில் பயணம் மேற்கொள்வா். அவா்கள் கடலூா், பரங்கிப்பேட்டை, பூம்புகாா் வழியாக காரைக்கால் சென்றடைவா். பின்னா், அங்கிருந்து மீண்டும் புதுச்சேரி வந்தடைவா்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுக வளாகத்தில் பாய்மரப் படகில் செல்லும் தேசிய மாணவா் படை பிரிவினருக்கான வழியனுப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேசிய மாணவா் படைப் பிரிவின் குரூப் கமாண்டா் மேனன் தலைமை வகித்தாா். அரியாங்குப்பம் எம்எல்ஏ பாஸ்கா் பயணத்தை தொடங்கிவைத்தாா்.

இதில், 60 மாணவா்கள் பங்கேற்று பாய்மரப் படகுகளில் சென்றனா். அவா்கள் 11 நாள்கள் கடலில் பயணித்து 302 கி.மீ. கடல் தொலைவைக் கடந்து காரைக்கால் சென்றடைவா். பின்னா், அங்கிருந்து மீண்டும் அவா்கள் புதுச்சேரிக்கு வந்தடைவா் என அதிகாரிகள் கூறினா். இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.