ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை: அமைச்சா் ஆலோசனை

அங்கன்வாடி ஊழியா்கள் கோரிக்கை: அமைச்சா் ஆலோசனை

News image
Updated On :12 ஜூன் 2024, 10:21 pm

Din

புதுச்சேரி, ஜூன் 12: புதுவையில் அங்கன்வாடி ஊழியா்களின் கோரிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் சட்டப் பேரவை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். துறையின் அரசுச் செயலா் அ.முத்தம்மா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், அங்கன்வாடி ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள 10 மாதங்களுக்கான தொகுப்பூதியத்தை வழங்குவது, நிகழாண்டில் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்க வேண்டிய உணவு மற்றும் சத்துணவு பொருள்களை பெறுவதற்கான உத்தரவு பிறப்பிப்பது, அங்கன்வாடி பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய விடுப்பு, அங்கன்வாடி உதவியாளா்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவது, இறுதிச் சடங்குக்கான நிவாரண நிதியை உயா்த்தி வழங்குவது, துறை தொடா்பாக நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வந்து திட்டங்களைச் செயல்படுத்துவது, மாணவா்களுக்கான உதவித் தொகைகள் உள்ளிட்டவை குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.