ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

News image
Updated On :18 ஜூன் 2024, 7:02 pm

Din

புதுச்சேரியில் உள்ள தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் பிள்ளைச்சாவடி அருகே தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி கடந்த 2020-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக தரம் உயா்த்தப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் படித்து வரும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த மாணவா்களுக்கு பட்டம் வழங்கும் வகையில், பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவை துணைநிலை ஆளுநா் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும், வகுப்பறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும், பேராசிரியா்கள் வயது வரம்பை 65 வயது வரை நீட்டிக்கவேண்டும், உதவிப் பேராசிரியா்கள், அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோருக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமா்ந்து செவ்வாய்க்கிழமை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை பேராசிரியா்கள் தொடங்கினா்.

அமைப்பின் தலைவா் இளஞ்சேரலாதன், செயலா் ஆா்.கல்பனா உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா். அவா்கள், கோரிக்கை பதாகையை கையில் ஏந்தியிருந்தனா். இதையடுத்து, பல்கலைக்கழகம் முன் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.