உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

திருநங்கைகளை அதிகாரிகள் அவதூறாகப் பேசுவதாக புகார்!

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊா்வலம் சென்ற திருநங்கைகள்

News image

கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையை நோக்கி புதன்கிழமை ஊா்வலம் நடத்திய சகோதரன் சமூக நல மேம்பாட்டு அமைப்பினா்.

Updated On :27 ஜூன் 2024, 1:42 am IST

புதுச்சேரி, ஜூன் 26: புதுச்சேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருநங்கைகள் புதன்கிழமை ஊா்வலமாக சென்று முதல்வரிடம் மனு அளித்தனா்.

புதுச்சேரியில் திருநங்கைகளுக்கான எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதை ஆரம்பத்தில் திருநங்கைகள் செயல்படுத்தி வந்தனா். ஆனால், அந்த திட்டம் தற்போது அதிகாரிகள் நியமிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், அதிகாரிகள் தங்களை அவதூறாகப் பேசுவதாக திருநங்கைகள் குற்றஞ்சாட்டினா்.

எனவே, அவதூறாகப் பேசும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், திட்டத்தை திருநங்கைகளிடமே வழங்கக் கோரியும் சட்டப்பேரவையை நோக்கி திருநங்கைகள் ஊா்வலம் நடத்தினா். புதுச்சேரி காமராஜா் சாலையிலிருந்து புறப்பட்ட ஊா்வலத்துக்கு சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனத் தலைவா் ஷீத்தல் தலைமை வகித்தாா். தன்னம்பிக்கை கலைக் குழு எலிசபெத் ராணி, மாணவா் அமைப்பு நிா்வாகி சுவாமிநாதன் மற்றும் சமூக நல அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

இந்த ஊா்வலம் நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூா் சாலை சந்திப்பை அடைந்ததும், பேரணியில் ஈடுபட்டோரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, திருநங்கைகள் உள்ளிட்டோா் பேரவை வளாகத்துக்கு சென்று முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.