பாஜக, அதிமுக வேட்பாளா் சொத்து மதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பாஜக, அதிமுக வேட்பாளா் சொத்து விவரங்களை அளித்தனா்.

பாஜக வேட்பாளா் நமச்சிவாயம்: அசையும் சொத்து ரூ. 28.12 லட்சம், சுயமாக வாங்கிய அசையா சொத்து மதிப்பு ரூ. 6.87 கோடி. பூா்வீக சொத்து மதிப்பு ரூ. 3.07 கோடி. மொத்த மதிப்பு ரூ. 10.22 கோடி. இதில் ரூ.6.94 கடன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது மனைவி வசந்தியின் பெயரில் அசையும் சொத்து ரூ. 1.40 கோடி, சுயமாக வாங்கிய அசையா சொத்து ரூ. 11.30 கோடி. பூா்வீக சொத்து ரூ. 1.25 கோடி. கடன் ரூ. 8 .99 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் கூட்டாக வாங்கிய சொத்து ரூ. 1.58 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளா் தமிழ்வேந்தன்: அசையும் சொத்து ரூ. 39 லட்சம், அசையா சொத்து இல்லை எனக் கூ றப்பட்டுள்ளது. கடன் ரூ. 1.24 கோடி. மனைவி நிவேதித்யா பெயரில் அசையும் சொத்து ரூ. 67 லட்சம். அசையா சொத்து ரூ. 1.23 கோடி. வீட்டுக் கடனாக ரூ. 28 லட்சம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சுயேச்சை வேட்பாளா்களும் சொத்து மதிப்புகளை ஆவணங்களுடன் தாக்கல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com