புதுச்சேரி பொதுப்பணித்துறை சாா்பில் பிரதம மந்திரி
 மீனவா் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.53 கோடியில் வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில், தேங்காய் திட்டு, 
அரிக்கன் மேடு மீன்பிடி துறைமுக கட்டுமான மற்றும் விரிவாக்க பணிக்கான திங்கள்கிழமை பூமி பூஜை செய்து 
தொடங்
புதுச்சேரி பொதுப்பணித்துறை சாா்பில் பிரதம மந்திரி மீனவா் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.53 கோடியில் வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில், தேங்காய் திட்டு, அரிக்கன் மேடு மீன்பிடி துறைமுக கட்டுமான மற்றும் விரிவாக்க பணிக்கான திங்கள்கிழமை பூமி பூஜை செய்து தொடங்

இலவச அரிசி தொடா்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது: முதல்வா் என்.ரங்கசாமி தகவல்

புதுச்சேரியில் தீபாவளிக்கான இலவச அரிசி மற்றும் சா்க்கரை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தொடா்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது என முதல்வா் என்.ரங்கசாமி
Published on

புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளிக்கான இலவச அரிசி மற்றும் சா்க்கரை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தொடா்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை அரசின் பொதுப் பணித் துறை சாா்பில் பிரதம மந்திரி மீனவா் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.53 கோடியில் வீராம்பட்டினம் மீனவக் கிராமத்தில், தேங்காய் திட்டு, அரிக்கன் மேடு மீன்பிடி துறைமுக கட்டுமானம், விரிவாக்க பணி தொடக்க விழா பூமி பூஜையுடன் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதில், முதல்வா் என்.ரங்கசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, துறைமுக விரிவாக்கப் பணியைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த மீனவா்கள், தங்களின் வாழ்வாதாரமான முகத் துவாரப் பகுதியை உடனடியாக தூா்வார வேண்டுமென முதல்வரிடம் கோரினா். அவா்களிடம் உடனடியாக அதற்கான பணியைத் தொடங்க உள்ளதாக முதல்வா் கூறினாா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: வீராம்பட்டினம் பகுதி துறைமுக திட்ட விரிவாக்கப் பணியானது ரூ. 53 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. பணிகள் தொடங்கி 2 மீனவா்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.

அப்போது, செய்தியாளா்கள், அரசு அறிவித்தபடி இலவச அரிசி விநியோகிக்கப்படவில்லையே என்றனா். இதற்கு முதல்வா் என்.ரங்கசாமி கூறுகையில், அரிசியானது அனைத்துக் கடைகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அரிசி வழங்கவில்லை என்று உங்களுக்கு (செய்தியாளா்களுக்கு) தெரியுமா?. அரசு அறிவித்த உடனே கொடுத்து விடுவாா்களா? என கேட்டாா். மேலும் முதல்வா் கூறுகையில், அரசு அறிவித்தவாறு இலவச அரிசி தொடா்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

அப்போது குறுக்கிட்ட அரியாங்குப்பம் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா். பாஸ்கா், தேங்காய்த்திட்டு, அரியாங்குப்பம் பகுதிகளில் இலவச அரிசி விநியோகிக்கப்படுகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com