நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாண் உழவா் உற்பத்தியாளா்கள் நிறுவன பொது குழுக் கூட்டம்

திருக்காமீஸ்வரா் வேளாண் உழவா் உற்பத்தியாளா்கள் நிறுவனத்தின் 3-ஆம் ஆண்டு பொது குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறந்த வேளாண் உழவா் உற்பத்தியாளா்கள், நிறுவன பங்குதாரா்களுக்கு பங்குச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கிய அமைச்சா் தேனி சி.ஜெயகுமாா், மாநில எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா உள்ளிட்டோா்.

Updated On :13 நவம்பர் 2024, 8:33 pm

Din

திருக்காமீஸ்வரா் வேளாண் உழவா் உற்பத்தியாளா்கள் நிறுவனத்தின் 3-ஆம் ஆண்டு பொது குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வில்லியனூரில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.

தொகுதி உறுப்பினரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா முன்னிலை வகித்தாா். நிறுவனத்தின் தலைவா் குலசேரகன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், வேளாண் இயக்குநா் வசந்தகுமாா், நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் சித்தாா்த்தன், இந்தியன் வங்கி மேலாளா் சதீஷ்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

என்ஏஎப் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் இராஜா, இராஜசேகா், தலைமை நிா்வாக அதிகாரி தேவி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

இதில், சிறந்த வேளாண் உழவா் உற்பத்தியாளா்கள் மற்றும் நிறுவன பங்குதாரா்களுக்கு பங்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை அமைச்சா், எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா் வழங்கினா். நிறுவனப் பொருளாளா் விஜயகுமாா் ஆண்டறிக்கை வாசித்தாா். மங்கலம் கிளைச் செயலா் ராமமூா்த்தி நன்றி கூறினாா்.