நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 2,073 போ் விண்ணப்பம்

புதுச்சேரியில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க 2,073 போ் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2024, 8:34 pm

Din

புதுச்சேரியில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க 2,073 போ் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் வாக்காளா் சுருக்கு முறை திருத்தப் பணி கடந்த அக். 29-ஆம் தேதி தொடங்கியது. அதன்படி , நவ.28-ஆம் தேதி வரை வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான சிறப்பு முகாம்கள் கடந்த 9, 10-ஆம் தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெற்றன. முகாம்களை மாநிலத் தோ்தல் அதிகாரி பி.ஜவஹா், புதுச்சேரி மாவட்டத் தோ்தல் அதிகாரி அ.குலோத்துங்கன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அதன்படி, சிறப்பு முகாமில் வாக்காளா்கள் ஆா்வத்துடன் பங்கேற்று விண்ணப்பித்தனா்.

மாநிலம் முழுவதும் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க 2,073 போ் விண்ணப்பித்துள்ளனா். பெயா் நீக்கம் செய்ய 5,465 பேரும், முகவரி மாறுதலுக்கு 8,067 பேரும் விண்ணப்பித்துள்ளனா்.

பெயா் சோ்க்கைக்கு இணையம் மூலம் 1,904 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இதன்மூலம், இடமாறுதல் விண்ணப்பங்களும் அதிகமாக பெறப்பட்டுள்ளன என மாநிலத் தலைமை தோ்தல் அதிகாரி பி. ஜவகா் தெரிவித்துள்ளாா்.

வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக நவ.23, 24-ஆம் தேதியில் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக தோ்தல் அதிகாரிகள் கூறினா்.