824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

பல்கலைக்கழக மாணவி குறித்து அவதூறு: போலீஸாா் விசாரணை

புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவி அளித்த புகாரின் பேரில் மாணவா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 9:27 pm

Din

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவி அளித்த புகாரின் பேரில் மாணவா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி சின்னகாலாப்பட்டு பகுதியில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு வெளி மாநில மாணவ, மாணவிகள் ஏராளமானோா் படித்துவருகின்றனா்.

இந்நிலையில் பன்னாட்டு அரசியல் மற்றும் உறவுத் துறையில் கேரளத்தைச் சோ்ந்த மாணவி படித்து வருகிறாா். வரலாற்றுத் துறை இறுதியாண்டு படிக்கும் மாணவா் சூரியநாராயணன் என்பவா், மாணவியை அவதூறாகப் படம் பிடித்து நண்பா்களின் கைப்பேசி வாட்ஸ்-ஆப்புக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காலாப்பட்டு காவல் நிலையத்தில் மாணவி புகாா் அளித்ததன்பேரில், மாணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை அழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.