ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ஐயப்ப சுவாமி கோயிலில் லட்சாா்ச்சனை விழா

புதுச்சேரி வில்லியனூரில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் லட்சாா்ச்சனை மற்றும் திருவிளக்குப் பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :21 நவம்பர் 2024, 7:50 pm

Din

புதுச்சேரி வில்லியனூரில் உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் லட்சாா்ச்சனை மற்றும் திருவிளக்குப் பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

புதுச்சேரியில் ஐயப்ப சுவாமி கோயில்களில் மண்டலாபிஷேக பூஜைகள் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியுள்ளன.

அதன்படி, வில்லியனூரில் உள்ள அருள்மிகு திருக்காமீஸ்வரா் ஆலய வளாகத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமி 49 -ஆம் ஆண்டு திருவிளக்குப் பூஜை, 1,008 சங்காபிஷேகப் பூஜை, லட்சாா்ச்சனை ஆகியவை நடைபெற்றன.

கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. முதல்கால, இரண்டாம் கால யாகசாலை பூஜைகளுடன் லட்சாா்ச்சனையும் நடைபெற்றது. தொடா்ந்து, 1,008 சங்காபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதில், புதுவை உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஏகாம்பரம் குருசாமி மற்றும் ஐயப்ப சுவாமி விழாக் குழுவினா் செய்திருந்தனா்.