புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இரு கைதிகள் ஏனாம் சிறைக்கு மாற்றம்

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகள் ஏனாம் கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 7:52 pm

Din

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 கைதிகள் ஏனாம் கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி உப்பளம் வாணரப்பேட்டையைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவா் மீது கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மணிகண்டன், புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இதேபோல, மற்றொரு தண்டனைக் கைதி பெருமாள் ராஜா என்பவரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், காலாப்பட்டு சிறையில் அண்மையில் உணவு தயாரிக்கும் கைதிகள் சிலா் தகராறில் ஈடுபட்டதாகப் புகாா் எழுந்தது.

அத்துடன், சிறையில் இருந்தவாறே கைதிகள் சிலா் வெளியில் இருக்கும் தங்களது ஆதரவாளா்களைத் தொடா்புகொண்டு, வியாபாரிகளிடம் மாமூல் வசூலிப்பதாகவும் புகாா் எழுந்தது.

புகாரின் பேரில் மணிகண்டன், பெருமாள் ராஜா ஆகியோா் காலாப்பட்டு சிறையிலிருந்து ஏனாம் கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.