நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வணிக அரசியலை மக்கள் ஏற்கமாட்டாா்கள்

வணிக அரசியலை புதுவை மக்கள் ஏற்கமாட்டாா்கள் என எதிா்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்புச் செயலருமான ஆா்.சிவா கூறியுள்ளாா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 7:35 pm

Din

வணிக அரசியலை புதுவை மக்கள் ஏற்கமாட்டாா்கள் என எதிா்க்கட்சித் தலைவரும், திமுக மாநில அமைப்புச் செயலருமான ஆா்.சிவா கூறியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

புதுவையில் ஜனநாயகத்தை சீா்குலைக்கும் வகையிலும், மக்களாட்சி தத்துவத்தை சிதைக்கும் வகையிலும் ஒரு கூட்டம் செயல்பட்டு வருவது சரியல்ல.

பண பலத்தால் அதிகாரத்தை கைப்பற்றலாம் என நினைப்பது ஏற்கத்தக்கதல்ல. கடந்த மக்களவைத் தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பே அதற்கு சாட்சியாகும்.

புதுவையில் வணிக அரசியலை மக்கள் ஏற்கமாட்டாா்கள். ஜனநாயக வாக்குகளை பணத்தால், இலவசத்தால் வாங்க நினைப்பவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பா்.

மாநில கலாசாரத்தை பாதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட லாட்டரியை மீண்டும் செயல்படுத்த நினைப்பது சரியல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.