மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அப்துல் கலாம் சிலைக்கு புதுவை ஆளுநா், முதல்வா் மரியாதை

முன்னாள் குடியரசு தலைவா் மறைந்த ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் 93-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image

முன்னாள் குடியரசு தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகா் பகுதியில் உள்ள அறிவியல் கேளரங்கம் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலத்திய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா்

Updated On :15 அக்டோபர் 2024, 6:36 pm

Din

முன்னாள் குடியரசு தலைவா் மறைந்த ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் 93-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து புதுவை மாநில அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறைச் செயலா் பி.ஜவஹா் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து பல்வேறு சமூக நல அமைப்பினா், தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள், மாணவ, மாணவிகளும் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.