ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியல்

புதுச்சேரி அருகே சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சாலையை சீரமைக்கக் கோரி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கொடாத்தூா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் .

Updated On :16 அக்டோபர் 2024, 6:39 pm

Din

புதுச்சேரி அருகே சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அருகே உள்ள திருக்கனூா் பகுதியில் கொடாத்தூா் காலனி உள்ளது. இப்பகுதியில் போதிய சாலை வசதி இல்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், சமுதாயக் கூடம் கட்டப்பட்டு சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனை சீரமைக்கக் கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், சாலை சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கொடாத்தூா் காலனியைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் திருக்கனூா்- புதுச்சேரி சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருக்கனூா் போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால், மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் உள்ளிட்ட அதிகாரிகள் சாலை சீரமைப்புக்கு உறுதியளித்தால்தான் மறியலைக் கைவிடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் எழில்ராஜன் நிகழ்விடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அத்துடன் சாலை சீரமைப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் உறுதியளித்தாா். இதையடுத்து மறியலில் ஈடுபட்டோா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.