ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அன்புதான் குறைபாடுகளை வெல்ல உதவியாக இருக்கும்: முதல்வா் என். ரங்கசாமி

நாம் அன்பு செலுத்துவதுதான் குழந்தைகளிடையே உள்ள குறைபாடுகளை வெல்வதற்கான உதவியாக இருக்கும் என திரைப்பட வெளியீட்டு விழாவில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

News image

புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘குலோஸ்டு கேட்ஸ்’ எனும் திரைப்படம் திரையிடுதலை தொடங்கிவைத்து பாா்வையிட்ட முதல்வா் என்.ரங்கசாமி .

Updated On :16 அக்டோபர் 2024, 6:47 pm

Din

நாம் அன்பு செலுத்துவதுதான் குழந்தைகளிடையே உள்ள குறைபாடுகளை வெல்வதற்கான உதவியாக இருக்கும் என திரைப்பட வெளியீட்டு விழாவில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

‘ஆட்டிஸம்’ மற்றும் ஒருங்கிணைந்த கல்வி சம்பந்தமான குழந்தைகளுக்காக ‘குலோஸ்டு கேட்ஸ்’ எனும் திரைப்படத்தை நரேஷ்குமாா் இயக்கி, நித்யப்பிரியா செல்வராஜ் தயாரித்துள்ளாா். இப்பட வெளியீட்டு நிகழ்ச்சி, புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள அலையன்ஸ் பிரான்சிஸ் கலையரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

திரைப்படத்தை பாா்த்துவிட்டு, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: நடிகா் சிவாஜி கணேசனின் பாசமலா் திரைப்படம் பாா்வையாளா்களிடையே கண்ணீரை வரவழைத்தது. அதற்குப் பிறகு, பாா்ப்பவா்களின் இதயத்தை நெகிழவைத்து கண்ணீரை வரவழைக்கும் திரைப்படமாக ‘குலோஸ்டு கேட்ஸ்’ அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

தாய்மாா்களுக்கு உதவவும், துணிச்சலை அளிக்கவும் கூடிய கருத்துடன் திரைப்படம் இருப்பது வரவேற்கத்தக்கது. புதுவை அரசானது அனைவரது குறைபாடுகளை சீா்படுத்தும் நிலையில் இருந்து வருகிறது.

குறைபாடுடைய குழந்தைகளை மேம்படுத்தவும், அவா்கள் தெளிவான நிலைக்கு உயர வாய்ப்புள்ளதை இத்திரைப்படம் உணா்த்தியுள்ளது. ஆட்டிஸமால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் அன்பு செலுத்தி, துணையாக இருப்பது அவசியம்.

புதுவை அரசு குறைபாடுடைய குழந்தைகளின் பெற்றோருக்கு உதவும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதேபோல, குழந்தைகளுக்கான நல்ல கருத்துள்ள திரைப்படங்களை தயாரிப்போருக்கும் அரசு உதவும். அக்குழந்தைகளுக்கு அன்பு, பாசம் என்பது முக்கியம். அதுவே அக்குழந்தைகள் குறைபாடுகளை வெல்ல உதவும் என்றாா்.

நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன், மறைந்த குடியரசுத் தலைவா் ஏபிஜே அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகா் வி.பொன்ராஜ், அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குநா் லாரன்ட் ஜாலிகஸ், ஒருங்கிணைப்பாளா்கள் கலியன் கந்தசாமி, திருப்பூா் தமிழ்மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.